உங்கள் செய்தி


 


                                               கலாநிதி மாரிஸ் புகைல் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு


 ஒரு பிரான்ஸ் நாட்டவரும் மம்மியும் 1981ல் பிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்குட்படுத்துவதற்காக தம்மிடம் ஒப்படைக்குமாறு பிரான்ஸ் அரசு எகிப்திடம் கோரிக்கை முன்வைத்தது. இவ்வேண்டுகோலுக்கினங்க பிர்அவ்னின் சடலம் விமானம் மூலமாக பிரான்ஸிற்குக் கொண்டு செல்லப்பட்டது. இவ்விமானத்தை வரவேற்பதற்காக பிரான்ஸின் அதிபரும் விமான நிலையத்தில் காத்திருந்தார். அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். அரச வரவேற்பளிக்கப்பட்ட பின்னர் பிர்அவ்னின் உடல் ஆய்வகம் நோக்கிக் கொண்டு செல்லப்பட்டது.
தொள்பொருள் ஆய்வாளர்கள் சத்திரசிகிச்சை நிபுணர்களென ஆரய்ச்சிக்குத் தேவையானவர்களனைவரும் ஆய்வகத்திலே குழுமியிருந்தனர். சத்திரசிகிச்சை குழுவுக்கு prof:Maurice Bucaille தலைமை தாங்கினார். பிர்அவ்ன் எப்படி மரணமடைந்தான் என்பது பற்றிய தகவல்களை கண்டுபிடிப்பதற்காக ஆய்வாளர்கள் பெரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இக்குழுவுக்குத் தலைமை வகித்த prof:Maurice அவர்களும் இப்பணியில் மூழ்கியிருந்தார். நல்லிரவு கழித்து ஆய்வு முடிவு வெளியாகியது. உடலில் உப்பு படிந்திருப்பதானது பிர்அவ்ன் கடலில் மூழ்கி மரணமடைந்துள்ளமைக்கான சிறந்த சான்றாகும் என்றும் கடலில் மூழ்கியவுடனே இவ்வுடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்றும் ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பின்னர் உடலைப் பாதுகாப்பாக வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கடலுக்கடியிலிருந்து வெளியெடுக்கப்பட்டிருந்தாலும் உடல் பழுதடையாமல் எந்த பாதிப்புக்களும் ஏற்பட்டிருக்காமல் காணப்பட்டமை பெரும் ஆச்சரியமாகவிருந்தது. prof:Maurice பிர்அவ்னின் உடல் கடலுள்ளிருந்து வெளியெடுக்கப்பட்டமை தொடர்பாகவும்இ அவ்வுடல் கடலுக்கடியிலே பாதுகாக்கப்படடிருந்தமை தொடர்பாகவும் தனது ஆய்வின் இறுதியரிக்கையினைத் தயாரித்தார். அங்கு குழுமியிருந்தவர்களில் ஒருவர் இன்னொருவரின் காதில் மெதுவாக ‘அவசரப்படாதே. முஸ்லிம்கள் இந்த மம்மி மூழ்கடிக்கப்பட்டதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.” என்று கூறினார். prof:Maurice அவர்கள் அந்த நபர் சொன்ன இத்தகவலை ஏற்கவில்லை. பிர்அவ்னைப்பற்றிய இச்செய்திளை அறிவதென்றால் கணனி வசதியுடன் கூடிய நவீன ஆய்வு மையங்கள் மூலமாகவே அறிந்துகொள்ள முடியுமென்று கூறினார். அதாவது பிர்அவ்ன் மூழ்கடிக்கப்பட்ட செய்தி பற்றி முஸ்லிம்களுக்குத் தெரியுமென்று அந்த நபர் கூறியதை மாரிஸ் புகைல் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்பொழுது அங்கிருந்த இன்னொருவர் ‘பிர்அவ்ன் மூழ்கடிக்கப்பட்டதாகவும்இ மூழ்கடிக்கப்பட்ட பின் அவனின் உடல் பாதுகாக்கப்படுமெனவும் முஸ்லிம்களின் அல்குர்ஆனில் கூறப்படுகின்றதே” என்று கூறினார். இச்செய்தியைக் கேள்வியுற்ற மாரிஸ் புகைல் அவர்கள் மேலும் திடுக்கிட்டுப் போனார். ‘இது எப்படி சாத்தியமாகும்? இந்த மம்மியின் உடல் 1898ல்தான் கண்டுபிடிக்கப்பட்டது. முஸ்லிம்களின் அல்குர்ஆனோ 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அவர்களிடம் இருக்கின்றது. எகிப்தியப் பழங்குடி மக்கள் தமது மன்னர்கள் இறந்த பின் அவர்களின் சடலங்கள் கெட்டுவிடாமல் இருப்பதற்காக ஒரு வகை மருத்துவ முறையினைப் பயன்படுத்தியுள்ளார்கள் என்ற செய்தி சில தசாப்பதங்களுக்கு முன்னர்தான் அரேபியர் உட்பட அனைவருக்கும் தெரியவாகிற்று அதற்கு முன்னர் முஸ்லிம்களுக்கு இந்த மம்மி பற்றிய தகவல் தெரிவதற்கு வாய்பில்லாத போது இது எப்படி சாத்தியமாயிற்று?” என்று அங்கு கூடியிருந்தவர்களிடம் வினவ ஆரம்பித்தார்.

prof:Maurice அவர்கள் அன்றைய இரவு பிர்அவ்னின் உடலுக்கு முன்னாலிருந்து அதை ஆழமாக அவதானிக்கத் தொடங்கினார். முஸ்லிம்களின் அல்குர்ஆன் இந்த மம்மியைப் பற்றிப் பேசுகின்றது என்று அந்த நபர் சொன்ன தகவல் ‘மூஸாவைத் துரத்திச் சென்ற அந்த பிர்அவ்ன் இதுவாகத்தான் இருக்க முடியுமோ?” ‘முஸ்லிம்களின் முஹம்மத் இவரை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்திருப்பாரோ?” ‘முஸ்லிம்களின் அல்குர்ஆன் கூறும் அந்த மம்மி இதுவாகத்தான் இருக்குமோ?” போன்ற வினாக்ளை அவருள் ஏற்படுத்தியது. மாரிஸ் அவர்களுக்குத் தூக்கம் வரவில்லை. தவ்ராத்தைக் கொண்டு தருமாறு அங்குள்ளவர்களிடம் மாரிஸ் அவர்கள் வேண்டிக் கொண்டதும் தவ்ராத் அங்கு கொண்டு வரப்பட்டது. தவ்ராத்தைப் படித்தார். ‘பிர்அவ்னின் படைகள் தண்ணீரில் மூழ்கின. அவனும் கடலில் மூழ்கினான். அவர்களுள் ஒருவரும் தப்பவில்லை” என்பது மாத்திரமே அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இன்ஜீலைப் படித்தார். அதிலும் இவ்வுடல் பாதுகாக்கப்படுவது பற்றி எதுவும் கூறப்பட்டிருக்கவில்லை. மாரிஸ் அவர்கள் அதிர்ச்சிக்குள்ளானார். பரிசோதனை முடிந்ததும் பிர்அவ்னின் உடல் எகிப்துக்குக் கொண்டு வரப்பட்டது.
இருந்தாலும் மாரிஸ் அவர்களால் ஒரு நிமிடமேனும் தாமதிக்க முடியவில்லை. இது பற்றி அறிவதற்காக முஸ்லிம் அறிஞர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவென இஸ்லாமிய நாடுகளுக்குப் பயணமாகத் தொடங்கினார். அந்த சந்திப்பிலே அவர் முதலாவதாக வினவியது பிர்அவ்னின் உடல் கடலில் மூழ்கடிக்கப்பட்டபின் பாதுகாக்கப்படுவது பற்றித்தான். அப்போது சபையிலிருந்த ஒருவர் அல்குர்ஆனில் சூறா யூனுஸில் இடம் பெறும் ‘உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம். மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர்”. என்ற வசனத்தை ஓதிக் காண்பித்தார். இக்குர்ஆன் வசனம் மாரிஸ் புகைல் அவர்களின் உள்ளத்தையே உலுக்கியது. உடனே எழுந்து எல்லோருக்கும் முன்னால் சத்தத்தை உயர்த்தியவராக ‘நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். அல் குர்ஆனை நம்பி விட்டேன்” என்று அவர் இஸ்லாத்தைத் தழுவினார்.
பின்னர் பிரான்ஸிற்குச் சென்று 10 வருடங்களாக நவீன கண்டு பிடிப்புக்கள் அல்குர்ஆனுக்கு எவ்வளவு தூரம் உடன்படுகின்றன என்ற ஆய்வை மேற்கொண்டு ‘அல்குர்ஆன்இ தவ்ராத் இன்ஜீல்…. நவீன அறிவியலின் ஒளியில் புனித வேதங்கள் ஓர் ஆய்வு”எனும் நூலை வெளியிட்டார். இதைப்பார்த்த மேற்குலகு அதிர்ந்து போனது. குறுகிய காலத்துள் இப்புத்தகம் விற்றுத் தீர்ந்து போனமை குறிப்பிடத்தக்கதாகும். இன்றைக்கும் எகிப்து நூதன சாலைக்கு பல ஆய்வாளர்கள் வந்து செல்வதைக் காண்கின்றோம். இவர்களுள் மாரிஸ் புகைல் போன்று படிப்பினை பெற்றவர்களைக் காண்பதற்கில்லை என்றுதான் கூறமுடிகின்றது. எனவே அல்குர்ஆன் வெறும் விஞ்ஞான உண்மைகளை மாத்திரம் சொல்லவில்லை மனித சமூகத்துக்குத் தேவையான எத்தனையோ அரிய பல வழிகாட்டல்களை சொல்லித் தருகின்றது. இதையுணர்ந்து மனித சமூகம் அதைப்படிக்குமானால் இன்னும் பல மாரிஸ் புகைல்கள் உருவாகுவார்கள் என்பது திண்ணம்.





                                                                                                                                                             News by :  கவிஞர் அஸ்மின் 
                          
                                                                             இலங்கை அகதி பெண் ஒருவர் தற்கொலை

இந்தியாவின் கரூர் மாவட்டத்தின், இலங்கை அகதி பெண் ஒருவர்,
இந்திய பொலிஸாரால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து அவர் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.


கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த இச்சம்பவம் குறித்து,  சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பரந்து பட்ட விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.


தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் கணவர் கொலைக்குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்.
அவர் தன் மனைவியை பார்க்க விரும்புவதாக கூறியே பொலிஸார் இந்த பெண்ணை அழைத்து சென்று வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக, குறித்த பெண்ணின் தாயார் கூறியுள்ளார்.


அன்றைய தினமே குறித்த பெண் தனக்கு தானே தீமூட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். பொலிஸார் காட்டுமிராண்டி தனமாக தாக்கியதும், ஒருவர் மாறி ஒருவராக பலர் கற்பழித்ததுமே அவரது தற்கொலைக்கான காரணம் என அவரது தாயார் குற்றம் சாட்டியுள்ளார்.


இறந்தவர் அளித்துள்ள வாக்குமூலத்தின் பிரகாரம் இதுவரை வழக்கு பதிவோ, விசாரணையோ நடைபெறாததால், அத் தாயார், சென்னை உயர் நீதிமன்றத்தின் மனு தாக்கல் செய்துள்ளார்.


இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம் இது தொடர்பில் பதில் அளிக்குமாறு தமிழ்நாடு மாநில உள்துறை செயலாளர் டி.ஜி.பி லத்திகா சரண் மற்றும் சி.பி.ஐ பணிப்பாளர் ஆகியோருக்கு பணிப்புரை விடுத்துள்ளது
                                                                                                                                                                               News by : islamic gang




                                                                   இந்திய வெளியுறவு மந்திரி

இந்திய வெளியுறவு மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா 4 நாள் அரசு பயணமாக இலங்கை சென்றார். அங்கு யாழ்ப்பாணத்தில் தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கான அடிக்கல் நாட்டுகிறார். இலங்கை செல்லும் முன் விமானநிலையத்தில் ஊடகவியலாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் ' இலங்கையிடம் உள்ள உறவு வரலாற்றுக்கு முன்பு இருந்தே தொடங்கியது.

கலாச்சார ரீதியாக இந்த உறவு நீடிக்கிறது. இருநாட்டு நல்லுறவை வலுப்படுத்துவதற்காக நான் இலங்கை செல்கிறேன். இலங்கையின் யாழ்ப்பாணம் மற்றும் ஹம்பன் தோட்டம்ஆகிய நகரங்களில் துணைத்தூதரகங்களை அமைக்க இருக்கின்றனர். அவற்றின் திறப்பு விழாவில கலந்து கொள்கிறேன்.

இலங்கை போரில் வீடுகளை இழந்த தமிழர்களுக்காக 50 ஆயிரம் வீடுகள் கட்டித்தர இருக்கின்றனர். அவற்றில் முதல்கட்டமாக ஆயிரம் வீடுகள் யாழ்ப்பாணம் பகுதியல் கட்டப்படுகிறது. அவற்றுக்கும் நான் அடிக்கல் நாட்டுகிறேன். இலங்கையில் முன்பு 3 லட்சம் தமிழர்கள் முகாம்களில் இருந்தனர். இப்போது முகாம்களில் வசிக்கும் தமிழர்களின் எண்ணிக்கை 17 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை இருக்கும். இந்த தமிழர்களையும் அவர்களின் சொந்த ஊரில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்தும் அதிபர் ராஜபக்சேவிடம் பேசுவேன். இந்த பிரச்சனை தமிழக-கேரளா மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது. இலங்கையில் தொழில் தொடங்க இந்திய தொழிலதிபர்களிடம் பேசியிருக்கிறேன். வடஇலங்கையில் ரெயில் பாதைகளை புதுப்பிதற்காக இந்தியா பல கோடி ரூபாய்களை மானியமாக அளித்துள்ளது. இது தவிர வாழ்வாதரத்தை இழந்து இருக்கும் தமிழர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கப்படும். காங்கேசன் துறை, ஹம்பன் தோட்டம் ஆகிய இடங்களில் துறைமுகங்களை இந்தியா கட்டித்தர இருக்கிறது.
வீடு இழந்த தமிழர்களுக்கு 10 ஆயிரம் டன் கூரை சீட்டுகளை இந்தியா வழங்கி இருக்கிறது. கொழும்பு-

தூத்துக்குடி இடையே கப்பல் போக்குவரத்து ஓரிரு மாதங்களில் தொடங்கும். தலைமன்னார்-ராமேசுவரம் இடையே கப்பல் போக்குவரத்து அடுத்த மாதம் தொடங்கும். மேலும் அடுத்த 3 ஆண்டுகளில் இலங்கைக்கு 7650 கோடி உதவி இந்தியா வழங்கும் என்று எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார்
                                                                                                                                                                                News by : islamic gang

No comments:

Post a Comment